CORBETT EV; ஒரே சார்ஜ் 200 கிமீ பயணம்! மாதம் EMI இவ்வளவு தானா? மின்சார வாகனத்துக்கு செம்ம ஆஃபர்
இந்தியாவில் பெட்ரோல் உயர்வால் மக்கள் பலரும் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். அந்த வகையில், ஸ்டார்ட் அப் நிறுவனமான பூம் மோட்டார்ஸ் (Boom Motors) இந்தியாவில் புதிய Corbett EV என்னும் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வாகனத்தின் விலை ரூ.89,999 ஆகும். நவம்பர் 12, 2021 முதல் புதிய கார்பெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவைத் தொடங்க உள்ளது.
மேலும், கார்பெட் EV (Corbett EV) ஆனது 2.3 kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை இயக்க முடியும்.

பேட்டரி திறனை இரட்டிப்பாக்கி, 4.6 kW ஆக மாற்றும் ஆப்ஷனும் உள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்த ஸ்கூட்டரின் சார்ஜரை வீட்டில் உள்ள எந்த சாக்கெட்டிலும் பொருத்த முடியும்.
இந்த புதிய ஸ்கூட்டரை மணிக்கு 75 கிமீ வேகத்தில் இயக்க முடியும். அதே நேரத்தில் 200 லோடுகள் இதில் ஏற்றலாம். மின்சார ஸ்கூட்டரை 5 வருட EMI உடன் வாங்கலாம் என்றும் கார்பெட் EV கூறியுள்ளது.
கார்பெட் EV வாங்க மாதத்திற்கு 1,699 ரூபாய் EMI செலுத்தினால் போதும். பூம் மோட்டார்ஸ் இந்த ஸ்கூட்டருக்கு 7 வருட வாரண்டியையும், பேட்டரிக்கு 5 வருட வாரண்டியையும் வழங்குகிறது.