நீரிழிவு நோயாளிகள் அன்னாசி பழம் சாப்பிடலாமா? ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க
அன்னாசி பழத்தில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல்நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன. இதன் இனிப்பு தன்மை மற்றும் சுவை காரணமாக அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.
இதனை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாகவும், அளவு மீறினால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கிறது. அந்த வகையில் அன்னாசி பழத்தினால் ஏற்படும் பாதிப்பினை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இரத்த சர்க்கரையை ஊக்குவிக்கும் அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது. ஆனால் அது அதிகளவில் உள்ளது தான் பிரச்சனையாக இருக்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் நல்லதல்ல. இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்துவிடும்.
மூட்டு தேய்மான பிரச்சினையை அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமலைன் குணப்படுத்துகின்றது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலையும் தடுக்கின்றது.
அன்னாசி பழம் யார் சாப்பிடக்கூடாது?
- ஆண்டி பயாடிக்ஸ் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் அன்னாசி பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
- அதிகமாக சாப்பிட்டால் இதிலிருக்கும் சிட்ரிக் அமிலம் வயிற்று வலியை ஏற்படுத்தும்.
- அலற்சி, ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்கள் அன்னாசியை சாப்பிட வேண்டாம்.
- அன்னாசி பழம் அதிகமாக சாப்பிட்டால் பல் சிதைவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |