நொடிப்பொழுதில் நடந்த விபத்து! விபத்தில் சிக்கிய பெண் காப்பாற்றப்படும் திக் திக் காட்சிகள்
இந்தியாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்று பெண் ஒருவர் தண்டவாளத்துக்கு நடுவே சிக்கிக்கொண்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று தெலுங்கானாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது, ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் அங்கு வந்த 71 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயிலில் ஏற முயல்கிறார்.
அப்போது திடீரென கால் வழுக்கி ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிக் கொள்கிறார்.
உடனே துரிதமாக செயல்பட்ட பெண்ணின் கணவரும், பிளாட்பார்மில் நின்றவர்களுக்கு குறித்த பெண்ணை காப்பாற்றுக்கின்றனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், பலரும் காப்பாற்றியவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
எனினும் விதிகளை பின்பற்றி நடப்பது அவசியம் எனவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
#WATCH | Maharashtra: Passengers saved a woman from falling under a moving train at Vasai Road Railway Station, yesterday.
— ANI (@ANI) September 19, 2021
(Source: CCTV at the railway station) pic.twitter.com/SBvmCWWAeU