ஒரே நாளில் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன தாத்தா: அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க
முதியவர் ஒருவர் நடிகர்களின் நடனத்தினை தோற்கடிக்கும் விதமாக நடனமாடி அசத்தியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில் ஒரு வயதானவர் திருமண நிகழ்ச்சியில் அசத்தலான நடனமாடி உள்ளார். இந்த வயதிலும் இப்படி ஆட முடியுமா என அனைவரின் புருவம் உயர்ந்தன.
முதியவரின் நடனத்தினை காணொளியாக எடுத்த யாரோ ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவை பிரணவ் டோங்க் குர்ஜார் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் வருண் தவான் ஆகியோரை விட இந்த வயதானவர் நன்றாக நடனமாடுகிறார் என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். இதை விட சிறந்த நடனம் எதுவாக இருக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.