மக்களின் கருத்துப்படி தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவேன்! எலான் மஸ்க்
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை உலகம் முழுவதும் கோடிக்கணக்காண மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல சிக்கல்கள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மிக விரைவில் நான் டுவிட்டர் CEO பதவியில் விலகுவேன் என எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
பதவி விலகும் எலான் மஸ்க்
அத்துடன், தான் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா எனக் கேட்டு பயனர்களை கருத்துக் கணிப்பில் கேட்டிருந்தார். மேலும் பயனர்களின் முடிவிற்கு தான் கட்டுப்படுவதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி டுவிட்டர் பயனர்களும் தங்கள் கருத்துக்களை வாக்குகளாக அளித்துள்ளனர். உலகம் முழுவதும் 35 கோடி பயனர்களை டுவிட்டர் கொண்டுள்ள நிலையில் எலான் மஸ்க்கின் கேள்விக்கு பதிவு செய்த நேரத்தில் சுமார் 7,741,097 வாக்குகள் பதிவாகியிருந்தன.
மேற்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 61சதவீதமானவர்கள் எலான் மஸ்க் பதவி விலக வேண்டுமென வாக்களித்துள்ளனர்.
பயனர்களின் கருத்துக்கு தாம் மதிப்பளிப்பதாக எலான் மஸ்க் ஏற்கனவே பதிவிட்டிருந்தார். அதன்படி இன்று ட்வீட் செய்துள்ள எலான் மஸ்க், மிக விரைவில் நான் ட்விட்டர் சிஇஓவில் இருந்து பதவி விலகுவேன் என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
Should I step down as head of Twitter? I will abide by the results of this poll.
— Elon Musk (@elonmusk) December 18, 2022
டுவிட்டர் சி.இ.ஓ பதவி வகிக்கத்தகுந்த முட்டாள்தனமிக்க ஒருவர் கிடைத்துவிட்டால் நான் பதவியை இராஜனாமா செய்வேன். அதற்குப்பின் software மற்றும் servers teamsகளுக்கு மட்டுமே தலை வகிப்பேன் என தெரிவித்துள்ளார்.