பணக்கஷ்டம் இல்லாமல் போக வேண்டுமா? வராகி அம்மனுக்கு இந்தப்பரிகாரங்களை செய்தால் போதும்
நாம் ஒவ்வொருவருக்கும் பணம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. என்னதான் நல்ல சம்பளத்துடன் வேலைக்கு சென்றாலும் வறுமை என்ற ஒன்று எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டுதான் இருக்கும்.
வாழ்க்கையில் வறுமை மட்டுமல்ல கடன் தொல்லை, குடும்பத்தில் பிரச்சினை, என பல பிரச்சினை வந்துக் கொண்டிருக்கும். அப்படி பிரச்சினையில் சூழ்ந்து இருப்பவர்கள் சனிக்கிழமையான இன்று வராகி அம்மனுக்கு ஏலக்காய் கொண்டு இந்தப் பரிகாரங்களை செய்து அம்மனை குளிர வைத்தார் பணக்கஷ்டம் உட்பட பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
பரிகாரங்கள்
மகாலட்சுமியின் அனுக்கிரகம் கொண்ட பொருட்களான துளசியையும் ஏலக்காயையயும் கொண்டு சில பரிகாரங்களை செய்யலாம். அதாவது ஒவ்வொரு மாதமும் வரும் பூர நட்சத்திர தினத்தில் ஏலக்காயில் மாலை சாற்றி வழிபட வேண்டும்.
இரண்டு மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி ஒவ்வொரு வாரமும் வழிபட்டு வந்தால் பணக்கஷ்டம் இல்லாமல் போகும். காலை எழுந்து சுத்தமாக குளித்து விட்டு 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் ஏலக்காய்களை கோர்த்து மகாலட்சுமி படத்திற்கு அணிவித்து துளசி இலையில் லட்சுமியின் பாதங்களை அர்ச்சனை செய்து மகாலட்சுமி நாமத்தை சொல்லி சொல்லி அர்ச்சனை வேண்டும்.
மாலையாக கோர்த்து கடவுளுக்கு அணிவித்த ஏலக்காய் மாலையை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமான எடுத்துக் கொள்ளலாம் அல்லது பாயாசம் செய்து வீணாக்காமல் பிரசாதமாக பயன்படுத்த வேண்டும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |