50 ஆண்டுகளுக்கு பின் அபூர்வ யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பேரதிர்ஷ்டம்
விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிடித்தமான நாள் ஏகாதசி, ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி வருகிறது, ஆக வருடத்திற்கு 24 ஏகாதசி வருகின்றது.
மாதத்தில் வரும் 2 ஏகாதசிகளில் ஒன்று கிருஷ்ண பக்ஷம் மற்றொன்று சுக்ல பக்ஷம்.
இந்நாளில் விரதம் இருப்பதன் மூலம் சிவன், பார்வதி மற்றும் விஷ்ணுவின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இன்று நள்ளிரவு 12.21 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 2.22 மணிக்கு முடிவடையும் ரங்பாரதி ஏகாதசி.
இதனால் பல அபூர்வ யோகங்கள் உருவாகியுள்ளன, இன்றைய நாளில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் புஷ்ய நட்சத்திரத்தில் ரவியோகம் உருவானது, இந்த சுபயோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு நற்பலனை அள்ளிக்கொடுக்கிறது.
அவர்கள் யார் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
இன்றைய நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாகும், ஏனெனில் அனைத்து இடங்களில் இருந்து வரவேண்டிய பணவரவு கிடைக்கப்பெறும், மிக குறிப்பாக தேவையற்ற செலவுகள் இருக்காது. பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும், பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்
அமலாகி ஏகாதசி சாதகமான பலன்களை கொடுக்கும், கல்வியில் முன்னேற்றம் உண்டு, தொழிலில் லாபம் அதிகரிக்கும், புதிய தொழில் தொடங்க திட்டமிட்டுள்ள நபர்கள் தாராளமாக தொடங்கலாம், சிவபெருமானின் ஆசி உண்டு.
துலாம்
சாதகமான பலன்களையும் மங்களகரமான நாளாக அமையும், வீட்டில் மகிழ்ச்சி குடிகொள்ளும், சந்தோஷமான சூழல் உருவாகும், உறவுகளுடன் இணக்கம் காட்டுவீர்கள், வீட்டில் உள்ள நபர்களின் ஆரோக்கியம் மேம்படும்.