Ehirneechal: தர்ஷன்- பார்கவி திருமணம்! கொந்தளித்த அன்புக்கரசி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் விறுவிறுப்பான காட்சிகள் சென்று கொண்டிருக்கிறது.
திருமணமான 4 பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைக்களம் சுவாரசியம் குறையாமல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ளது.
பெண்களை அடக்க நினைக்கும் ஆணாதிக்கம் நிறைந்த குணசேகரனால் சிக்கல்களை சந்திக்கும் பெண்கள் அதிலிருந்து மீண்டுவருவதே கதை.
கடந்த வார எபிசோட்களில் தர்ஷன் திருமணத்திற்காக குடும்பத்தினர் அனைவரும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மண்டபத்திற்கு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, ஜீவானந்தம்- பார்கவியை பொலிசார் தேடி வருகின்றனர், அவர்கள் இருக்கும் இடத்தை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து விடுவார்கள் போலிருக்கிறது.
ஈஸ்வரியின் ஆசைப்படி தர்ஷனுக்கு, பார்கவியை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர்.
இதற்காக மணப்பெண் போல் அலங்கரித்துள்ள பார்கவியை, எப்படியாவது திருமண மண்டபத்திற்கு கொண்டு வந்து சேர்க்க போராடுகிறார் ஜீவானந்தம்.
இதை தெரிந்து கொண்ட அன்புக்கரசி மண்டபத்தில் கூச்சலிடுகிறார், இதனால் கடும் கோபம் கொண்ட குணசேகரன் என்ன செய்யப்போகிறார் என பரபரப்பான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
