உடல் எடைக்கும் முட்டை மஞ்சள் கருவிற்கு என்ன தொடர்பு- மருத்துவ விளக்கம்
பொதுவாக புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் ஒன்றாக முட்டை பார்க்கப்படுகின்றது. இதனால் தினமும் ஒரு முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக் கொடுக்கலாம்.
ஏனெனின் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு முட்டையில், வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி2, பி6, பி12, போலேட், பயோட்டின் ஆகிய சத்துகளும் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம், ஜிங்க் உள்ளிட்ட தாதுக்களும், ஆன்ட்டி-ஆக்சிடன்ட் எனும் நோயெதிர்ப்புப் பொருட்களும் உள்ளன.
மேலும், ஒரு முட்டையில் 75 கலோரிகள், 7 கிராம் புரோட்டீன், 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் இரும்பு, வைட்டமின், தாதுக்கள், கரோட்டினாய்டுகள் போன்றவைகளும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதுவரையில், மனித 20 அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ளது.இதில், 11 அமினோ அமிலங்களை உடலும், மிதமாக இருக்கும் 9 9 அமினோ அமிலங்களை உணவும் உற்பத்திச் செய்யும்.
உணவு மூலம் உற்பத்தி செய்யப்படும் 9 அமினோ அமிலங்களையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் முட்டைக்கு உள்ளது.
மஞ்சள் ஏன் சாப்பிடக் கூடாது?
அந்த வகையில், ஒட்டுமொத்த முட்டையின் வெள்ளைக்கருவில் 50%க்கும் மேலான அல்புமென் மற்றும் ஓவல்புமின் எனப்படும் புரதங்கள் உள்ளன. அத்துடன் நீர்ச்சத்தில் 90% வெள்ளைக்கருவில் இருக்கிறது.
இதை தவிர வைட்டமின் பி2, பி5 ஆகியன மாத்திரம் உள்ளன. முட்டையில் பெரிதாக வைட்டமின்கள் இல்லை எனக் கூறப்படுகின்றது. வெள்ளைக்கருவில் ஒரு சதவீதம் கூட கொழுப்பு இல்லை. இதனால் டயட்டில் இருப்பவர்கள் வெள்ளைக்கருவை மாத்திரம் உணவுடன் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இருந்தபோதிலும் முட்டையின் முழு சத்தையும் பெறுவதற்கு முழு முட்டையை தான் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
சாதாரணமான முட்டை வெள்ளைக்கருவில் 18 கிராம் கலோரி, புரதம் 4 கிராம், வைட்டமின் பி2, பி5 சத்துகள் மொத்தமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |