வாங்கிய முட்டை ஆரோக்கியமானாதா என கண்டறிவது எப்படி?
முட்டையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. உடலுக்கு தேவையான புரத சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால், முட்டையின் நிறத்தை வைத்தே அதில் புரத சத்துக்கள் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாக முட்டையை உடைக்கும் போது அதனுள் இருக்கும் மஞ்சள் கரு முக்கியமாக மூன்று வகையாக இருக்கும். அவை ஆரஞ்சு, வெளிர் ஆரஞ்சு அல்லது மஞ்சள். இதில், ஆரஞ்சு மஞ்சள் கருவுடன் கூடிய முட்டை மிகவும் ஆரோக்கியமானது மற்றும் அதில் உள்ள புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகமாக உள்ளது.
மற்ற கோழிகளை விட இயற்கை சூழலில் வளர்க்கப்படும் கோழிகள் ஆரோக்கியமானவை என உணவு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கோழிகளுக்கு போதுமான அளவு சூரிய ஒளி, சரிவிகித உணவு ஆகியவை கிடைக்கும்.
மேலும், இந்தக் கோழிகளின் முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இது தவிர, வெளிர் ஆரஞ்சு நிற கரு கொண்ட முட்டையும் சற்று ஆரோக்கியமானது.
இருந்தாலும், மஞ்சள் நிற கரு கொண்ட முட்டைகள் நோய்வாய்ப்பட்ட அல்லது ஆரோக்கியமற்ற கோழிகளின் முட்டைகளாக இருக்கலாம் எனவே நல்ல முட்டையை தேர்ந்தெடுத்து உண்பது உடல்நலத்துக்கும் சீரானது.