செட்டிநாடு முட்டை பொடிமாஸ் பத்தே நிமிடத்தில் செய்யலாம்...எப்படி தெரியுமா?
செட்டிநாடு முட்டை பொடிமாஸ் பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டை - 5 பச்சை
- மிளகாய் - 2
- வெங்காயம் - 1
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
முட்டை நன்கு வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் தயார்.