ஒருமுறை முட்டை கீமா இப்படி செய்து கொடுங்க...
புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் முட்டை குழம்பு முட்டை பொரியல் தான் நினைவிற்கு வருகின்றது.
நம்மில் பலர் சப்பாத்திக்கு முட்டை கிரேவி குருமா தான் செய்து சாப்பிடுவோம் அந்த வகையில் சப்பாத்திக்கு சைடிஷாக வைத்து சாப்பிடும் முட்டை கீமா மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதன் சிறப்பு என்னவென்றால் நாம் அவித்து வைத்த முட்டையை துருவி செய்வதாகும். இப்படி செய்வது அதிக ருசியை அதிகப்படுத்தும்.
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகவும் இருக்கும். ஒருமுறை செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கேட்பார்கள்
தேவையான பொருட்கள்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (இரு துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - சிறிது
வேக வைத்து துருவிய முட்டை - 4
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் அதில் வெண்ணெய் சேர்க்கவும். அது நன்கு உருகிய பின் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் நாம் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதக்கியவுடன் நாம் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதில் தக்காளியை சேர்த்து அது நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

இவை வதக்கிய பின் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துஅதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இவை நன்கு வதக்கிய பின் நாம் துருவி வைத்த முட்டையை சேர்த்து கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு வதக்கிய பின் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான முட்டை கீமா மசாலா ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |