முடி நீளமாக வளர Egg Hair mask-ஐ இப்படி யூஸ் பண்ணுங்க
முட்டை தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் மிக முக்கியப் பொருள்.
முட்டை நம்முடைய தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷ்னராகவும் தலைமுடி சேதமாவதை தடுக்கவும் முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் முடியின் வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது.
அந்த வகையில் நீண்ட நாட்கள் வளராமல் இருக்கும் முடி கூட நீளமாகவும் கருக்காருன்னு அடர்த்தியாகவும் வளர இந்த Egg Hair mask போதும். இதனை எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
- கற்றாழை- 1துண்டு
- முட்டை- 2
- ஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் கற்றாழையில் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து தண்ணீரில் நன்கு அலசி மிக்ஸியில் எடுத்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பௌலில் அரைத்த கற்றாழை, முட்டையில் வெள்ளைக்கரு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்தால் முட்டை ஹேர்பேக் தயார்.
பயன்படுத்தும் முறை
முதலில் தலைமுடியில் நன்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்துகொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள ஹேர்பேக்கை உச்சந்தலை முதல் நுனி முடி வரை நன்கு தடவிகொள்ளவும்.
இதனை ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பின் தலைக்கு குளித்து வந்தால் முடி நல்ல பிராகசமாக இருக்கும்.
வாரம் ஒரு முறை இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வை தடுத்து நீளமா கூந்தலை பெற உதவியாக இருக்கும்.