சப்பாத்தி அருமையான சைடிஷ் முட்டை மசாலா... வெறும் பத்து நிமிஷம் போதும்
அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான முட்டை மசால் வெறும் 10 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான உணவுகளி் ஒன்று தான் முட்டை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி சாப்பிடுகின்றனர்.
முட்டையில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ள நிலையில், குழம்பாகவும், ஆம்லேட், பொரியல் என செய்து சாப்பிட்டிருப்பீர்கள். தற்போது வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான மசால் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்

தேவையான பொருட்கள்
முட்டை - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை
மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளி, மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை, உப்பு இவற்றினை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விடவும். அதனுடன் மிளகாய், மல்லி, மஞ்சள் பொடிகள், கரம் மசாலா இவற்றினை சேர்க்கவும்.

மேலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். பின்பு இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி 6 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான முட்டை மசாலா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |