விவாகரத்து வதந்தி பரப்பும் YouTubersக்கு சட்ட நடவடிக்கை -ஏ.ஆர்.ரகுமான் தெரிவிப்பு
தற்போது ஏ.ஆர்.ரகுமான் அவரது விவாகரத்து விஷயத்தில் வீண் வதந்திகளை பரப்பி வரும் YouTubersக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர் ரகுமானின் அதிரடி முடிவு
தற்போது பல பிரபலங்கள் விவாகரத்து பெற்று வருகின்றனர். இது ரசிகர்களுக்கு ஒரு அடுத்தடுத்து அதிர்ச்சியாகவே உள்ளது. சமீபத்தில் ஏ.ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு தன்னுடைய கணவர் ஏ.ஆர் ரகுமானை பிரிவதாக சட்டபூர்வமாக அறிவித்திருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் கூறியது "நாங்கள் இருவரும் இணைந்து முப்பதாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவோம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் இனி அது நடக்கப்போவதில்லை. இது இருவருடைய மனங்களும் ஒத்துப் போய் ஏற்பட்ட ஒரு பிரிவு. ஆகவே எங்களுக்கும், எங்களுடைய குடும்பத்தாருக்கும் தேவைப்படும் தனிமையை ரசிகர்கள் தயவுகூர்ந்து கொடுக்கவேண்டும் என்று ஏ.ஆர் ரகுமான் ஒரு பதிவினையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த தகவலை தொடர்ந்து பயில்வான் போன்ற பல YouTubers பல விமர்சனங்களைவெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நர்மதா சம்பத் என்பவர் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏ.ஆர் ரகுமானின் சார்பில் இந்த செய்தியை வெளியிடுவதாக கூறியிருக்கிறார். அந்த அறிக்கையில் கூறியிருப்பது "ரஹ்மான் மற்றும் சாய்ராவின் விவாகரத்து குறித்து தவறான கருத்துக்களை இனி எந்த ஊடகங்களும் பதிவிடக்கூடாது.
ஏற்கனவே அப்படி பதிவிட்டிருக்கும் வீடியோக்கள் மற்றும் செய்திகளை எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் நீக்கிவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் மீது நிச்சயம் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Notice to all slanderers from ARR's Legal Team. pic.twitter.com/Nq3Eq6Su2x
— A.R.Rahman (@arrahman) November 23, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |