காதை சுத்தம் செய்வதற்கு பட்ஸ் பயன்படுத்துறீங்களா? இனிமேல் அந்த தவறை செய்யாதீங்க
காது சுத்தம் செய்யும் பட்ஸை பயன்படுத்தினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காதுகளை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் பெரும்பாலான நபர்கள் பட்ஸை தான் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு பட்ஸை பயன்படுத்தி காதை சுத்தம் செய்வதால் காதுகளில் செவித்திறன் மோசமாக பாதிக்கப்படுகின்றது. அடிக்கடி பட்ஸ் பயன்படுத்தினால் எவ்வாறு செவிப்புலன் பாதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பட்ஸ் ஏன் பயன்படுத்தக்கூடாது?
காதுகளில் இருப்பது அழுக்கு அல்ல. ஆனால் காதில் இருக்கும் மெழுகு இரண்டு வகையான சுரப்பிகளை உற்பத்தி செய்வதுடன், காதில் உள்ள தூசி, அழுக்கு, பாக்டீரியாக்களிருந்து பாதுகாக்க உதவுகின்றது.
இயர் பட்ஸ் மெழுகை வெளியேற்ற நாம் பயன்டுத்தும் நிலையில், இவை காதினுள் இருக்கும் மென்மையான தோலை சேதப்படுத்தியும் விடுகின்றது. மேலும் இயர்பட்ஸ் பயன்படுத்தும் போது மெழுகு மேலும் உள்ளே சென்றுவிடுவதுடன், காது கேட்கும் திறனை இழக்கின்றது.
இயர்பட்ஸ் பயன்படுத்தினால் வெளிப்புறத்திலுள்ள பாக்டீரியாக்கள் காதுக்குள் நுழைந்து மென்மையான தோலை சேதப்படுத்துவதுடன், தொற்றுக்கும் வழிவகுக்கும். மேலும் கடுமையான வலி, அரிப்பு மற்றும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.
இயர் பட்ஸ் மூலம் கொழுகை உள்ளே தள்ளி கெட்டியாக்கிவிடுவதால், ஒலி அலைகள் காதுகுழலை அடைவதைத் தடுக்கின்றது. இவை நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்க செய்கின்றது.
பெரும்பாலான நேரங்களில் காதுகளில் இருக்கும் மெழுகு இயற்கையாக வெளிவந்துவிடுமாம். காதில் அரிப்பு, வலி போன்ற பிரச்சனைகளை உணர்ந்தால் உடனடியாக மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
