இரவில் தூங்காவிட்டால் நீரிழிவு நோய் ஏற்படுமா? மருத்துவ விளக்கம்
பொதுவாக நமது வீடுகளில் இரவு நேரங்களில் தூங்காமல் இருந்தால் நம்மை ஆந்தை என கூறுவார்கள்.
ஏனெனின் ஆந்தைகள் தான் இரவு வேளைகளில் தூங்காமல் இருக்கும். இதன் விளைவாக அவர்களின் உயிரியல் கடிகாரம் மற்றவர்களை விட வேறுபட்டுக் காணப்படும்.
அந்த வகையில் சிலர், அலுவலக நேர மாற்றம் மற்றும் ஏதாவது தவறான பழக்கம் காரணமாக தாமதமாக உறங்க செல்வார்கள்.
ஆனால் இது பார்ப்பதற்கு ஜொலியாக இருந்தாலும் காலப்போக்கில் ஆரோக்கியம் ரீதியாக பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடித்தால் என்ன நடக்கும்? இனி தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரங்களில் வேலை பார்ப்பவர்கள் காலையுணவை தாமதமாக அல்லது தவிர்ப்பார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் நினைத்த நேரங்களில் சாப்பிடுவார்கள்.
இதன் காரணமாக அடி வயிற்று பகுதியில் தொப்பை உருவாகின்றது. இது நாளடைவில் டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கின்றது.
இது போல் இரவு தூங்காமல் இருப்பதால் என்னென்ன ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்பதனை பார்க்கலாம்.
தூங்காவிட்டால் என்ன நடக்கும்?
1. அதிக நேரம் தூக்கம் இல்லாமல் இருப்பது இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு டைப்2 நீரிழிவு குறைபாட்டினை ஏற்படுத்தும்.
2. சரியான உணவு பழக்கங்கள் இல்லாமல் சிற்றுண்டிகளை சாப்பிடுவார்கள். இதனால் கொழுப்பு அதிகரித்து அதிகமாக எடை போட ஆரம்பிக்கும்.
3. நேர மாற்றம் காரணமாக உடலின் செயற்பாடு மாற்றமடையும்.
4. ஒழுங்கற்ற தூக்க முறைகள் மற்றும் சோசியல் ஜெட்லாக் ஆகியவை மன அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் தொடர்ந்து தூங்காமல் இருக்காதீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |