இதய நோயாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நெய்! உடலில் ஏற்படும் பாரிய விளைவுகள்
பொதுவாக வீட்டில் தயாரிக்கப்படும் நெய் பலருக்கும் பிடித்தமான ஒன்று.
ஏனெனின் கடையில் வாங்கும் நெயை விட இது மிகவும் ஆரோக்கியமானது. மேலும் பெரும்பாலான இந்திய உணவுகளிலும் இனிப்பு பதார்த்தங்களிலும் நெய் சேர்க்கப்படுகிறது.
நெய்யில் அதிகளவு வைட்டமின்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிரம்பியுள்ளன.
மேலும் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் சருமம் பளபளப்பாகும். இயற்கையான மூலத்திலிருந்து பெறப்படும் நெய்யானது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் இந்த நெய்யை சிலர் அதிகம் சேர்த்துக்கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் அவரவர் உடலுக்கு ஏற்ப சில உணவுகள் ஒத்துப்போகும், சில உணவுகள் ஒத்துப்போகாது, அதைப்போல தான் நெய்யும், இப்போது யாரெல்லாம் நெய் சாப்பிடக்கூடாது என்பது பற்றி இங்கே பார்ப்போம்.