காலையில் எழுந்தவுடன் மொபைல் பார்க்கும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து வரும்!
பொதுவாக நாம் காலையில் எழுந்தவுடன் பார்ப்பது மொபைல் போன் தான். படுக்கையில் எழுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே போனை கையில் எடுத்து விடுகிறோம்.
ஸ்மார்ட் ஃபோனை அதிகாலையில் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
தினமும் காலையில் 15 நிமிடங்கள் சரி படுக்கையில் இருந்தபடி, மொபைலை பயன்படுத்துகிறார்கள் என ஆய்வுகளில் கண்டறியப்படுகிறது.
ரீல்ஸ், யூ-ட்யூப் வீடியோக்கள், வாட்ஸ்-அப் சாட்ஸ் என மொபைலை ஸ்க்ரோல் செய்யாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். இது நாளடைவில் மன ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் மொபைல் போன்கள் பார்ப்பதால் உங்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
இவ்வளவு பிரச்சினை இருக்கா?
1. அதிகாலை எழுந்தவுடன், மொபைல் நெட்-ஐ ஆன் செய்ததும் நிறைய நோட்டிஃபிகேஷன் வந்துக் கொண்டிருக்கும். அப்போது உங்களுக்கு ஒருவிதமான பதற்றம் வரும். காலையில் சில அதிர்ச்சியான தகவல்களையும் நீங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இதுவே அன்றைய நாளை வீணாக்க வாய்ப்பு உள்ளது.
2. தூங்கி எழும் போது மட்டுமல்ல தூங்குவதற்கு முன்னரும் மொபைல் போன்களின் பாவனை அதிகரித்து விட்டது. கண்களுக்கும் மூளைக்கும் ஓய்வு தேவைப்படும் சமயத்தில் நீங்கள் மொபைல் பார்க்கும் பொழுது அது உங்களின் தூக்கத்தை சீர்குலையச் செய்யும். ப்ளூ லைட், மெலடோனின் என்பன தூக்கத்துக்கான ஹார்மோனை பாதித்து உங்களை சரியாக தூங்க விடாது. இதனால் இடையில் உங்களுக்கு முழிப்பு வரும், நிம்மதியற்ற தூக்கம் வரும், தலைவலி வரலாம் உள்ளிட்ட பிரச்சினைகள் வரும். மன ஆரோக்கியம் அவசியம்.

3. காலை எழுந்தவுடன் சில செய்திகளை பார்க்கும் பொழுது மனதில் ஒரு விதமான பதற்றம் ஏற்படும். இதுவே உங்கள் வேலையில் கவன சிதறலை ஏற்படுத்தி விடும். இதனால் முடிந்தளவு மொபைல் பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொள்வது சிறந்தது.
4. காலையில் எழுந்து செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் தொலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தால் உங்களுடைய அன்றாட வேலைகள் தடைப்படும். உற்சாகமாக ஆரம்பமாக வேண்டிய அன்றைய நாள் மோசமான நாளாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

5. கண் விழித்தவுடன் மொபைல் பார்ப்பதற்கு பதிலாக படுக்கையில் சில நிமிடங்கள் ஸ்ட்ரெட்சஸ் செய்துவிட்டு அன்றாட வேலைகளை துவங்கினால் ஆரோக்கியமானவர்களாக இருப்பீர்கள். ஒரு நாள் செய்து விட்டால் அடுத்தடுத்து வரும் நாட்களில் இதுவே பழக்கமாகி விடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |