பாலுடன் இந்த பழத்தினை சேர்த்து சாப்பிடவே கூடாதாம்! இனியும் இந்த தவறை செய்யாதீங்க
பாலும் பழமும் என்ற சொல்லில் பழம் என்பது வாழைப்பழத்தையே குறிக்கும். ஆனால் இந்த இரண்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு கேடு தரும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அதாவது வாழைப்பழத்தையும், பாலையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்கும். இவை இரண்டையும் தனித்தனியாக சாப்பிடும் போது உடலுக்கு கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.
ஆனால் இவை இரண்டையும் ஒன்றாகசாப்பிட்டால் ஜீரண பாதையின் செயல்பாட்டை குறைக்குமாம். மேலும் இவை இரண்டையும் ஒன்றாகச் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..
தீமைகள்
கர்ப்பிணிகள் பாலும், வாழைப்பழத்தையும் ஜூஸாக அருந்தக் கூடாது. வேண்டுமென்றால் இரண்டையும் இடைவேளை விட்டு உண்பதால் தாய்க்கும், கருவுக்கும் நல்லது. வாழைப்பழம், பால் இரண்டையும் ஒன்றாகச் சாப்பிடும் போது தேவையற்ற நச்சு அமிலங்களை வெளியாகிறது.
வாழைப்பழமும்,பாலும் குளுர்ச்சியான உணவு. இவை இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் போது அவை ஜீரண செயல்பாட்டையே குளறுபடியாக்குகின்றன. குறிப்பாக சைனஸ் பிரச்னை, சுவாசப் பிரச்னை கொண்டோருக்கு இந்த கலவை உணவை பரிந்துரைப்பது மிக மிகத் தவறு.
இதன்மூலம் அலர்ஜி, வயிற்றுக் கோளாறு, வாந்தி போன்றவை உண்டாகும். குறிப்பாக கர்ப்பிணிகள் இவ்வாறு உண்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த கலவையானது சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, அலர்ஜி போன்ற உபாதைகளையும் உண்டாக்கும்.