தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை… வியக்கவைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் கிடைகக்கூடியதும் அன்றாட உணவில் எளிதாகச் சேர்த்துக்கொள்ளக்கூடியதுமான வேர்க்கடலையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
குறிப்பாக, இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் (MUFA) மற்றும் பாலிசாச்சுரேட்டட் (PUFA) கொழுப்புகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL-ஐ குறைத்து, நல்ல கொழுப்பான HDL-ஐ அதிகரிக்க உதவுகின்றன. மேலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

அந்தவகையில், தினசரி ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய முக்கிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஒரு கைப்பிடி வேர்க்கடலையில் இவ்வளவு நன்மைகளா?
வேர்க்கடலையில் உள்ள தாவர ஸ்டெரால்கள், கொழுப்பு குடல் வழியாக இரத்தத்தில் சேர்வதைத் தடுக்க உதவுவதன் மூலம், தமனிகளில் அடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
மேலும், இதில் காணப்படும் ரெஸ்வெராட்ரோல் மற்றும் அர்ஜினைன் போன்ற சேர்மங்கள் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், வைட்டமின் E மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்களும் வேர்க்கடலையில் உள்ளன. குறிப்பாக, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதுடன், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
வேர்க்கடலையின் சிவப்புத் தோலிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், முடிந்தவரை தோலுடன் சாப்பிடுவது கூடுதல் நன்மை தரம்.வறுத்த அல்லது வேகவைத்த வேர்க்கடலையைத் தேர்வு செய்வது நல்லது.

அதிக எண்ணெயில் பொரித்ததையோ, அதிக உப்பு சேர்த்ததையோ தவிர்ப்பது சிறந்தது. பொதுவாக, ஒரு நாளைக்கு சுமார் 25–30 கிராம் (ஒரு கைப்பிடி) வேர்க்கடலை போதுமானதாகக் கருதப்படுகிறது.
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், வேர்க்கடலை நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரவும் உதவும். எனவே, அளவோடு எடுத்துக்கொண்டால், சுவையான சிற்றுண்டியாக மட்டுமின்றி சத்தான உணவாகவும் வேர்க்கடலை அமைகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |