சீரியலில் முதலிரவு காட்சிகள்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தற்போது வெள்ளித்திரை அளவுக்கு சின்னத்திரையும் முன்னேறி வருகின்றது என்னவோ உண்மைதான்.
இன்றைய எபிசோடில் என்ன நடக்கும்? நாளைய எபிசோட் இப்படித்தான் இருக்கும் என்று அதில் மூழ்கிப் போயுள்ள எத்தனையோ பேரை நாம் பார்க்கின்றோம்.
இந்நிலையில் விஜய் டிவியில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே சீசன் 2.
இதன் கதை, கதாபாத்திரங்களின் நடிப்பு, இடையிடையே இடம்பெறும் பாடல்கள் என அனைவரது மனதையும் கவர்ந்த நம்பர் 1 சீரியல் என்று கூறினால் தகும்.
இந்நிலையில் கதையில் கதாநாயகனின் அத்தை மகளாக வரும் ரம்யா, பார்த்தி மீது இருக்கும் கோபத்தினால் ஜே.கேயின் அன்பை புரிந்துகொண்டு அவரை திருமணம் செய்து கொள்கின்றார்.
இதற்கு ரம்யாவின் தாய் தேவி எதிர்ப்பு தெரிவித்தாலும், ரம்யா அவரை சமாதானப்படுத்திவிட்டார்.
இதனால் சீரியலின் அடுத்தகட்ட நகர்வு எப்படியிருக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகமாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில் ரம்யா, ஜே.கே தம்பதியின் முதலிரவுக் காட்சிகள் ஒளிபரப்பாகியது. அதில் வெள்ளித்திரைக்கு இணையாக ரொமான்ஸ், லிப்லொக், படுக்கை அறை என பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஒரு சீரியலில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறுவது சரியா? என்று ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
டி.ஆர்.பி இடத்தை தக்க வைத்துக்கொள்ள சீரியல்களுக்கு இடையில் நடக்கும் போட்டியில் எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கி அடிப்போம் என்று கூறுமளவுக்கு இந்த காட்சிகள் அமைந்துள்ளன.
ஹிந்தி சீரியல்களைப் போல் தமிழ் சீரியல்களும் மாறிவிட்டதா என்றும் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.
ஹிந்தி சீரியல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் தமிழ் சீரியல்களை முந்த வேண்டும் என்ற நோக்கில் நேரடி தமிழ் சீரியல்கள் இவ்வாறான காட்சிகளை எடுக்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒருபுறம் இவ்வாறு இருக்க, இன்னொரு தரப்பினர் ரொமான்ஸ் மிகவும் அருமையாக இருந்தது என்று ஆர்ட் எமோஜிகளை பதிவிட்டு பாராட்டுக்களை வழங்கி வருகின்றனர்.