ஈரமான ரோஜாவே 2 பிரியா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?
தமிழில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கலக்கி கொண்டிருக்கிறார் நடிகை சுவாதி.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர், கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.
கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடித்துள்ள சுவாதி, கன்னட சீரியலில் நுழைந்து, தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
காதல் கதையை மையப்படுத்தி உருவாகிக் கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில், பிரியா கதாபாத்திரத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார் சுவாதி.
இதில் சுவாதிக்கும், திரவியத்துக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியும் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகிவிட, ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
நடனத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட சுவாதி, எப்போதுமே யூனிட்டில் கலகலவென இருப்பாராம்.
யாரையாவது வம்பிழுத்துக் கொண்டே துறுதுறுவென சுற்றித்திரியும் சுவாதிக்கு, பெயிண்டிங் மீது தீராக்காதலாம்.
சின்னத்திரையில் மின்னினாலும் பெரிய திரையில் அனைத்து மொழிப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே அவரது ஆசையாம்.