முதல்வர் பதவியை ‘ராஜினாமா’ செய்தார் எடப்பாடி பழனிசாமி..! மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து
தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து மோதின.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

தற்போதுவரை திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
இதனால் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து மோதின.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போதுவரை திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
இதனால் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் அதிமுக கூட்டணி 77 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து தோல்வியை தழுவியது.
இதனால் எடப்பாடி பழனிசாமி இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சேலத்திலிருந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
இதற்கு ட்விட்டரில் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதில், ‘மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.