நீங்கள் பன்னீரை விரும்பி சாப்பிடுறீங்களா? இந்த பிரச்சனை ஏற்படுமாம்
சத்துக்கள் நிறைந்த பன்னீர் அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவாக இருக்கும் நிலையில், இதனை அதிகமாக சாப்பிட்டால் என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பன்னீர்
இன்றைய காலத்தில் அசைவ பிரியர்களின் புரதச்சத்தை பூர்த்தி செய்வதில் பன்னீர் அதிக உதவியாக இருக்கின்றது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருக்கின்றது.
புரோட்டீன், கால்சியம் நிறைந்த பன்னீர் சைவ பிரியர்களுக்கு ஒரு அருமையான உணவாக இருக்கின்றது. ஆனால் பனீரை அதிகமாக சாப்பிட்டால் சில உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படும். அவை என்னென்ன என்பதை இந்த பதவில் தெரிந்து கொள்வோம்.

என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?
பன்னீரில் கலோரிகள் அதிகம். அதனால் இதை அதிகமாக சாப்பிடுவது உடல்எடை அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாகும்.
அதிகளவில் பன்னீர் சாப்பிடும்போது, சிலருக்கு வயிறு உப்புசம், அஜீரணம், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

பன்னீரில் பூரிதக் கொழுப்பு அதிகமாக இருப்பதால், உடலில் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு உயரும். இது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தினை அதிகரிக்கலாம்.

பால் பொருட்கள் ஒவ்வாமை அல்லது சென்சிட்டிவிட்டி உள்ளவர்களுக்கு, பன்னீர் சாப்பிட்டால் கேஸ், மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

பன்னீரில் கால்சியம் சத்து மிக அதிகம். எனவே, இதை அதிகமாக உட்கொள்வது, சிலருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணமாக அமையலாம்.
சிலருக்கு பன்னீர் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். இதனால் தோலில் அரிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |