இஞ்சி அதிகமா சாப்பிடும் நபரா நீங்கள்? இந்த ஆபத்து நிச்சயம்
எப்படியான நோயாக இருந்தாலும் அதற்கு சிறந்த தீர்வாக அமைவது இஞ்சி தான்.மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல் சேர்த்து பயன் பெறலாம்.
அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும். சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும்.
இது சுவையோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. இந்த ஸ்ட்ராங் டீ, இதயத்தையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. இஞ்சி டீயில் வைட்டமின் C, மெக்னீசியம் மற்றும் பல தாதுக்கள் இருப்பதால், பலவிதமான உடல்நல பிரச்சனைக்கு இது உதவுகிறது.
ஆனால், அளவுக்கு அதிகமாக இஞ்சியை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது, பலவிதமான உடல் பிரச்சனைகள் வரும். அது எப்படிபட்ட பிரச்சனகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இஞ்சி
இஞ்சி ஒரு செரிமான பொருளாக இருப்பதால் இது வயிற்றில் அசிட்டை கூடுதலாக உருவாக்கும்.இதன் காரணமாக இரைப்பை சம்பந்தபட்ட நோய்களான நெஞ்செரிச்சல், ஏப்பம் அதிகம் வருதல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை வரலாம்.
இஞ்சி டீ, வயிற்றில் அமிலத்தன்மையை அதிகப்படுத்தும். இதனால் அசிடிட்டி பிரச்சனை உண்டாகும்.உயர் இரத்தம் அழுத்தம் உள்ளவர்கள், சரியான அளவில் இஞ்சியை எடுத்துக்கொள்ளும்போது நல்ல பலனை அடைகிறார்கள்.
ஆனால், இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள், சிறிதளவு இஞ்சியை எடுத்துக்கொண்டால் கூட அது தீங்கு விளைவிக்கும். ஏனெனில், இஞ்சியில் இரத்தத்தை மெலிதாக்கும் கூறுகள் உள்ளது.
இது போன்ற சூழலில், வெறும் வயிற்றில் தேவைக்கு அப்பாற்பட்ட இஞ்சியை நீங்கள் எடுத்துக்கொண்டால், குறைவாக இருக்கும் இரத்த அழுத்தம் மேலும் குறைந்து மோசமான விளைவை ஏற்படுத்தும்.
பெண்கள் மாதவிடாய் சமயத்தில் இஞ்சியை எடுத்து கொண்டால் இது உஷ்ணம் அதிகம் என்பதால் ரத்தபோக்கு அதிகமாக இருக்கும்.இது எவ்வளவு சக்கரையை குறைக்கும் மூலிகையாக இருந்தாலும் அது உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
இதை தவிர இது சருமம் சம்பந்தமாக நிறைய பிரச்சனைகளை உண்டாக்கும்.சருமத்தில் சொறி போன்ற பிரச்சனை சிலருக்கு இருக்கலாம். ஒரு சிலருக்கு சருமம் சிவந்து போகுதல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
இந்த பிரச்சனைகள் இருக்கும் போது இஞ்சியை வெறும் வயிற்றில் எடுத்து கொள்வது நன்மை தராது.இதன் காரணமாக நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு இஞ்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
சாதாரண மனிதர் ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராம் மட்டுமே எடுத்துக்கொள்ளளலாம்.கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 2.5 கிராமுக்கும் அதிகமாக இஞ்சியை எடுத்துக்கொள்ள கூடாது.
உங்களுடைய செரிமானம் மிக மோசமாக இருந்தால், 1.2 கிராமுக்கும் அதிகமாக இஞ்சியை எடுத்துக்கொள்ள கூடாது. உங்கள் உடல் எடை குறைவாக இருப்பின், 1 கிராம் இஞ்சிக்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |