நோய் வராமல் தடுக்க வேண்டுமா? உங்கள் தட்டில் இந்த உணவுகள் கட்டாயம் இருக்க வேண்டும்...
நோய் வராமல் தடுக்க எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்
உணவுகள்
இன்றைய காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் பெரும்பாலும் நமக்கு தீங்கு ஏற்படுத்துகின்றது. மேலும் பல உடல்நல பிரச்சனையையும் கொண்டு வருகின்றது.
அதிலும் நாகரீகம் மற்றும் டயட் என்ற பெயரில் உணவுக் கட்டுப்பாடு பல நோய்களைக் கொண்டு வருகின்றது. அதிலும் கடைகளில் பாட்டிலில் விற்கப்படும் கார்பனேட்டட் குளிர்பானங்களையும் மக்கள் விரும்புகின்றனர்.
அந்த வகையில் இவற்றை நாம் சாப்பிடும் போது பல நோய்கள் ஏற்படுகின்றது. இதனால் எந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைக்கலாம் என்று இங்கு கீழே காணலாம்

எந்த உணவுகள்
முதலில் புரதச்சத்து நிறைந்த உணவுகளான பயிறு வகைகள் அதிலும் பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, உளுந்து, ராஜ்மா, பட்டாணி, கம்பு, சோளம், துவரம் பருப்பு, மைசூர் பருப்பு மற்றும் நிலக்கடலை போன்றவவற்றை சாப்பிடலாம்.
இவை அனைத்தையும் சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதனால் இது நம் உடலை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வலிமையை தருகிறது.

இரண்டாவதாக முட்டை, முட்டை சத்தான உணவாக கருதப்படுகிறது. இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிலும் இதில் உள்ள புரதம் வைட்டமின் ஏ, பி12, டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
அது போன்று பழங்களான வாழைப்பழம், கொய்யாப்பழம், பெரிய நெல்லிக்காய் மற்றும் நாவல் பழம் போன்றவற்றில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளன.
இதனால் இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவை அனைத்தையும் விட நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமின்றி கொய்யாப்பழம் மற்றும் நாவல் பழம் சாப்பிடுவதால் நம் செரிமானம் மேம்படும்

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |