சாண்ட்விச் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? இந்த விளைவுகள் ஏற்படும் ஜாக்கிரதை
மாலை நேர உணவாக பெரும்பாலான நபர்கள் சாப்பிடும் சாண்ட்விச் ஏற்படுத்தும் கெட்ட விளைவுகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாண்ட்விச் சாப்பிடுவதால் ஆபத்தா?
சாண்ட்விச் பயன்படுத்தப்படும் பிரட் பேக்கேஜ் செய்யப்பட்ட, சுத்திகரிக்கப்ப்ட மாவு மற்றும் இயற்கையான சுவையைக் கொண்டது. அவை செரிமான அமைப்பிற்கு நல்லதல்ல.
சாண்ட்விச்சில் பதப்படுத்தப்பட்ட சீஸ் அதிக அளவு உப்பு உள்ளன இவை உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனையை அதிகரிக்கின்றது.
சாண்ட்விச்சில் சர்க்கரை, இறைச்சி கெச் அப் சேர்க்கப்படும். இது உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்யும். மேலும் சர்க்கரை நோய் வருவதற்கும் வழிவகுக்கும்.
0SHDPBT
சாண்ட்விச்சில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி தான் சேர்க்கப்படும். அந்த இறைச்சியில் ரசாயனங்கள் மற்றும் நைட்ரேட்டுகள் பயன்படுத்தப்படும். இது புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
சாண்ட்விச்சில் பயன்படுத்தப்படும் மயோனைசில் அதிகளவு கலோரிகள் உள்ளதால், இது எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் மற்றும் உடலில் கொழுப்பை அதிகரிக்கும்.
சாண்ட்விச் தயாரிக்க பயன்படுத்தப்படும் பிரட்டில் ஊட்டச்சத்து மதிப்பு குறைவாகவே உள்ளது. குறிப்பாக வெள்ளை பிரட்டில் தயாரிக்கப்படும் சாண்ட்விச் ஆரோக்கியத்திற்கு கேடு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |