கோடைகாலத்தில் இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க.... விஷமாக மாறுமாம்
Food poisoning : கோடைகாலத்தில் விஷமாக மாறும் மூன்று உணவுகள் குறித்து அவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Food poisoning Health Tips Tamil : கோடை காலத்தில் உணவு விஷமாக மாறும் (Food Poisoning) வாய்ப்புகள் அதிகம். இந்த காலகட்டத்தில் பாக்டீரியாக்கள் விரைவாக வளரும் தன்மை கொண்டவை. வெட்டிய பழங்கள், காலாவதியான தயிர், திறந்தவெளியில் வைக்கப்பட்ட சாப்பாடு, நீண்ட நேரம் வைத்திருந்த சாதம் போன்றவற்றில் பாக்டீரியாக்கள் வளர்ந்து, வயிற்றுப் பிரச்சினைகளை உருவாக்கலாம்.
புட் பாய்சன் ஏற்படுத்தும் 3 முக்கிய உணவுகள்:
1. கோழி/மாட்டிறைச்சி (மாமிசம்)
முழுமையாக சமைக்காமல் அறைகுறையாக சமைத்த இறைச்சி உணவு சாப்பிட்டால் வயிற்றில் புட் பாய்சனை ஏற்படுத்தும். கோடையில் முழுமையாக சமைக்கப்படாத கோழி/மாட்டிறைச்சியில் ஈ.கோலி, சால்மோனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். இதனால் இப்பிரச்சனை ஏற்படும் என்பதால் எப்போதும் இறைச்சியை நன்கு வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்.
2. தர்பூசணி/முலாம்பழம்
வெட்டி வைத்த தர்பூசணி/முலாம்பழம் சாப்பிடுவது ஆபத்தானது. கோடையில் இவை விரைவில் கெட்டுப்போகின்றன, மேலும் வெட்டிய பிறகு 2 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். அதனால், எப்போதும் புதிதாக வெட்டிய பழங்களை மட்டுமே உண்ணுங்கள்.
3. சாதம்
ராத்திரி மீதி சாதத்தை மறுநாள் சாப்பிடுவது புட் பாய்சனை ஏற்படுத்தும். சமைத்த அரிசியில் பாசிலஸ் செரஸ் (Bacillus cereus) என்ற பாக்டீரியா வளர்ந்து, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திக்கு காரணமாகலாம். சமைத்த 1 மணி நேரத்திற்குள் சாப்பிடவும். மீதமுள்ளதை விரைவாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
புட் பாய்சன் முக்கிய அறிகுறிகள்
வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படும். அதாவது, கடுமையான வயிற்றுப்போக்கு, தண்ணீர் போன்ற மலம் வரும். வாந்தி அல்லது குமட்டல், வயிற்று வலி அல்லது சுளுக்கு குறிப்பாக தொப்புளைச் சுற்றி இருக்கும். காய்ச்சல் அல்லது குளிர் நடுக்கம், தலைவலி அல்லது தசை வலி, உடல் சோர்வு அல்லது தளர்ச்சி, வாய் வறட்சி, சிறுநீர் குறைவு, மயக்கம், பார்வை மங்கல் அல்லது தசை பலவீனம் ஆகிய அறிகுறிகள் தென்படும்.
புட் பாய்சனை தடுக்கும் முக்கிய டிப்ஸ் :
- காய்கறிகள் & பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்தவும்.
- உணவை முழுமையாக சமைத்து, குளிர்சாதனப் பெட்டியில் சரியாக சேமிக்கவும்.
- வெளியில் திறந்து வைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
- கையை அடிக்கடி கழுவவும்.
புட் பாய்சன் வயிற்றுப்போக்கு, குமட்டல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். கடுமையான நிலையில் மருத்துவரை நேரில் சென்று பார்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |