கோடைக்காலத்தில் பப்பாளி சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?
கோடை காலத்தில் பப்பாளி சாப்பிடுவதால் நாம் என்னென்ன ஆரோக்கிய நன்மையினைப் பெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பப்பாளி
பப்பாளி பழத்தில் எண்ணற்ற சத்துக்க்கள் காணப்படுவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கு நன்மை அளிக்கின்றது.
நீர்ச்சத்து அதிகமாகவும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கோடை காலத்தில் குளிர்ச்சியையும், ஆற்றலையும் அளிக்கின்றது.

என்னென்ன நன்மைகள்?
உடலை நீரேற்றத்துடன் வைப்பதற்கு பப்பாளி உதவுகின்றது. ஏனெனில் இதில் 85 முதல் 88 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுகின்றது. வியர்வை மூலம் இழந்த திரவங்களையும், எலக்ட்ரோலைட்டுகளையும் மீண்டும் அளித்து சோர்வை நீக்குகின்றது.
பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதி, ஜீரணசக்தியை மேம்படுத்துகின்றது. இதனால் மலச்சிக்கல், வாயு தொல்லை, அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி, ஏ சத்துக்கள் கோடைகால நோய்தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், பருவக்கால நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது.
சூரிய ஒளி, வியர்வை இவற்றினால் ஏற்படும் முகப்பரு, சருமத்தில் ஏற்படும் கருமை இவற்றிலிருந்து பாதுகாக்கின்றது. முகசுருக்கங்களையும், முகப்பொலிவையும் அளிக்கின்றது.

இதிலுள்ள குறைவான கலோரி, அதிக நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி, வயிறு நிறைந்த உணர்வை அளிக்கின்றது. மேலும் உடல் எடையை பராமரிக்கவும் உதவுகின்றது.
எப்பொழுது சாப்பிடலாம்?
பப்பாளி சாப்பிட சரியான நேரம் :காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது சிறந்தது. இந்த நேரத்தில் பப்பாயின் நொதி சிறப்பாகச் செயல்பட்டு, செரிமான அமைப்பைத் தூண்டுகிறது. பசியைக் கட்டுப்படுத்த, மதிய உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்போ அல்லது மதிய உணவின்போதோ பப்பாளியைச் சாப்பிடலாம். இரவில் தாமதமாக பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது சிலருக்கு வாயுத்தொல்லை அல்லது வயிறு கனமாக இருப்பதை உணரவைக்கும்.

இந்த விஷயங்களில் கவனம் செலுத்த மறக்காதீர்கள் :கர்ப்பிணிப் பெண்கள் பச்சையான அல்லது முழுமையாகப் பழுக்காத பப்பாளியைச் சாப்பிக்கூடாது. சரியான நேரத்தில் பப்பாளி சாப்பிடுவது, கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியையும், ஆற்றலையும், முழுமையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |