இறைச்சி பிரியரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
பொதுவாகவே அசைவ உணவை விரும்பாதவர்கள் யாருமில்லை. அப்படி அசைவ பிரியர்களின் பட்டியலில் இறைச்சி வகைகளுக்கு எப்போதும் தனி இடம் இருக்கும்.
அதிக இறைச்சியை உட்கொள்வது புற்றுநோய் செல்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகளின் மூலம் கண்டறிப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அதிகமாக இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு கோலோரெக்டல் புற்றுநோய் (Colorectal cancer) ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
பெருங்குடல் புற்றுநோய் வருடாந்தம் பெருங்குடல் புற்றுநோயால் மில்லியன் கணக்காக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பெருங்குடல் புற்றுநோய் செரிமான அமைப்பில் உள்ள முக்கியமான உறுப்புகளை பாதிப்பதால் ஊட்டச்சத்து உறிஞ்சுதல், மலம் உருவாக்கம் மற்றும் கழிவு நீக்கம் போன்வற்றில் தாக்கம் செலுத்துகின்றது.
அதிகப்படியாக இறைச்சி சாப்பிடுவதும் பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் பிரதான காரணியாக இருக்கின்றது.
பொதுவாகவே இறைச்சிகள் அதிகப்படியான வெப்ப நிலையில் சமைக்கப்படுகின்றது. இதனால் இறைச்சியல் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் உருவாகின்றது.
பெருங்குடலில் ஏற்படும் நாள்பட்ட வீக்கம் காரணமாக குடல் சுவர்களில் தொடர்ச்சியாக செல்கள் மாற்றமடைவதால் கட்டிகள் உருவாகின்றன.கட்டுப்படுத்த முடியாத செல் வளர்ச்சி ஏற்படுகின்ற பட்சத்தில் இது புற்றுநோயாக உருவெடுக்கின்றது.
பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்
குடல் பழக்கத்தில் மாற்றம் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் மலத்தின் நிலைத்தன்மையில் மாற்றம் மலத்தில் இரத்தம் பிடிப்புகள், வாயு அல்லது வலி போன்ற வயிற்று உபாதைகள் பலவீனம், களைப்பு , திடீர் எடை இழப்பு மற்றும் கடுமையான வாந்தி போன்றவை முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றது.
மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு மலம் கழித்த பிறகும் மலம் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு, மலத்தில் குருதி வெளியேறுதல், மலம் கழிக்கும் பொழுது அடிவயிற்றில் வலி ஏற்படுவது மற்றும் ரத்த சோகை, திடீர் உடல் எடை இழப்பு போன்றவை பெருங்குடல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
சாதாரணமாக போகும் மலத்தில் திடீரென மாற்றம் வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இது குடல் இயக்கத்தில் மாற்றம் என்று கூறப்படுகிறது. திடீரென மலம் தண்ணீராகப் போகலாம், அல்லது மலச்சிக்கல் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த கூடாது.
உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்வதன் மூலம் பெருங்குடல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அழிக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |