இதய நோயை நெருங்க விடாமல் அடித்து விரட்டும் புளி ஜூஸ்! யாரெல்லாம் குடிக்கலாம் தெரியுமா?
தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த புளி ஜூஸ் உதவும். இந்த புலி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். உடலில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வதிலும் புளியின் பங்களிப்பு முக்கியமானது.
தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
தேவையான பொருட்கள் புளிச் சாறு - அரை கப் நாட்டு சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு எலும்பிச்சை துண்டுகள் - 1 தண்ணீர் - விருப்பத்திற்கு ஏற்ப செய்முறை புளியங் பழத்தில் கொடைகளை நீங்கி விட்டு புளிச்சாற்றை பிழித்து அதை நாட்டு சர்க்கரை அல்லது தேனோடு கலந்து கொள்ள வேண்டும். தேவையான அளவு குளிர்ந்த நீரை அந்த கரைசலில் சேர்க்க வேண்டும்
எலுமிச்சை துண்டுகளை அதில் பிழிந்து விட்டு, ஐஸ் க்யூப்களை கலந்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சத்தான புளி ஜூஸ் ரெடி. உண்மையில், உலகெங்கிலும் சில மக்கள் நாள்பட்ட நோய்களைக் குறைவாகக் கொண்டு நீண்ட காலம் வாழ்கின்றனர், ஏனெனில் அவர்கள் பலவகையான தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்கின்றன.
நீங்களும் ஆரோக்கியமாக உணவு பழக்கவழக்கங்களை கடைப்பித்து நோய் இல்லாமல் வாழுங்கள்.
தற்போது நிறைய மக்கள் இதய நோய்களால் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே இதய நோய்களிலிருந்து உங்களை காக்க இது போன்ற பானம் உதவியாக இருக்கும். பருகி நன்மைகளை அனுபவிங்கள்.