குளிர் காலத்தில் கட்டாயம் கொய்யா பழம் சாப்பிடுங்க... இந்த 4 நோய்க்கு தீர்வு கிடைக்கும்
குளிர்காலங்களில் கொய்யா பழம் ஏன் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குளிர் காலம் ஆரம்பித்துவிட்டாலே பெரும்பாலான நபர்களின் உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டுவிடும். இந்த பருவத்தில் ஆரோக்கியமான உணவுகள் மட்டுமின்றி பழங்களை சாப்பிட வேண்டும்.
அதிலும் பருவகால பழங்களை கட்டாயம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒன்று தான் கொய்யா ஆகும். ஆரஞ்சு பழத்தை விட கொய்யாவில் வைட்டமின் சி சத்து இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
குளிர் காலத்தில் கொய்யாபழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
குளிர் காலங்களில் கிடைக்கும் பழங்களில் ஒன்றான கொய்யா பழத்தினை நாம் சாப்பிடுவதால் சளி மற்றும் இருமல் இவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும்.
ஒரு நாளைக்கு ஒரு கொய்யா என்பதைப் போன்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் பல நன்மைகளை நாம் பெற முடியும்.
நன்மைகள் என்ன?
குளிர் காலங்களில் ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கின்றது. அதிக அளவு வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், தொற்று நோய்கள் ஏற்படாமலும் தடுக்கின்றது.
குளிர் காலங்களில் உடற்பயிற்சி செய்வதை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். இதனால் உடல் எடை அதிகரித்துவிடும். கொய்யா பழம் சாப்பிட்டால் உடல் பருமனிலிருந்து விடுபடுவதுடன், இதில் உள்ள மிக குறைவான கலோரி மற்றும் நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும்.
மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனையை குணப்படுத்த உதவுகின்றது. குளிர் காலத்தில் கொய்யா பழம் சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சி வராமலும், ரத்த அழுத்தம் அதிகரிக்காமலும் இருக்குமாம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் கொய்யாவில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோயை எதிர்ப்பதுடன், இப்பழத்தினை சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு நீண்ட நேரம் கட்டுப்பாட்டில் இருக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |