சப்பாத்தி, பூரிக்கு அச்த்தல் சுவையில் கிரேவி செய்யணுமா? வெறும் 10 நிமிடங்கள் போதும்
பொதுவாகவே தற்காலத்தில் அலுவல வேலையையும் பார்த்துக்கொண்டு சமையலும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தான் பலரும் இருக்கின்றனர்.
இது பெண்களுக்கு மட்டுமன்றி தூரபிரதேசங்களில் தங்கியிருந்து வேலை செய்யும் ஆண்களுக்கும் பொருந்தும்.
அப்படி வேலைக்கு சென்று சோர்வாக வீடு திரும்புபவர்கள் இரவு உணவுக்கு வெறும் 10 நிமிடத்தில் அசத்தல் சுவையில் சப்பாத்தி, பூரிக்கு எவ்வாறு கிரேவி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
தக்காளி - 2 (அரைத்தது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 1/2 தே.கரண்டி
கரம் மசாலா - 1 தே.கரண்டி
முந்திரி பொடி - 2 தே.கரண்டி
சுடுநீர் - தேவையான அளவு
பட்டாணி - 1/2 கப்
கசூரி மெத்தி - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிதவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கி, அதனுமன் அரைத்த தக்காளியை சேர்த்து, கெட்டியான பதத்திற்கு வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுமன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன் பின்பு முந்திரி பொடியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு. பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, மூடி வைத்து 5 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
இறுதியில் கசூரி மெத்தியை கையால் நசுக்கி தூவிட்டு கிளறினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையான சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி கிரேவி தயார்.
அதில் பட்டாணிக்கு பதிலாக காளான், மீல் மேக்கர், பன்னீர் என்று எதை வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |