மீனுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க... ஆபத்து ஏற்படுமாம்
மீனுடன் நாம் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மீன்
ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக இருக்கும் மீன், அசைவ பிரியர்களின் முக்கியமான தேர்வாக இருக்கின்றது.
மீனில் ப்ரை, குழம்பு, ஸ்நாக்ஸ் என்று செய்து சாப்பிட்டு வருகின்றோம். இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.
இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன், எடையைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியம் மற்றும் மூளை திறனை மேம்படுத்தவும் செய்கின்றது.
இவ்வாறு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மீனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்துகின்றது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மீனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்
மீனுடன் பால், தயிர் இவற்றினை சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை செரிமான பிரச்சனை, வீக்கம், வயிறு வலி, தோல் நோய் தொற்றுகள், ஒவ்வாமை பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றது.
அதிகமாக பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளை மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் மீனின் தரம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைகின்றது. மேலும் அதிக அளவு நிறைவுற்ற மற்றும் கொழுப்புகள் இருப்பதால், மோசமான தீங்கு விளைவிக்கின்றது.
மீனுடன் சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும். பழங்களில் இருக்கும் அமிலங்கள் மீனில் உள்ள புரதங்களுடன் வினைபுரிந்து உடலில் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது.
மீனுடன் காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். இவை வயிறு மற்றும் குடல் அசௌகரியம், வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றது.
மீன் சாப்பிட்ட பின்பு உடனடியாக பாலில் செய்யப்பட்ட இனிப்புகளை எடுத்துக் கொள்ளவே கூடாது, இதே போன்று ஐஸ்கிரீமையும் சாப்பிடுவதை தவிர்க்கவும். இவை சருமம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.
மாவுசத்து நிறைந்த உருளைக்கிழங்களை மீனுடன் சாப்பிடுவது ஆபத்தாகும். இதனால் கூடுதல் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் கிடைப்பதுடன் செரிமான அமைப்பை மெதுவாக்குகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |