தினமும் உலர் பழங்களை இப்படி சாப்பிட்டு பாருங்க... ஏராளமான நன்மையை பெறுவீங்க
உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மையினைப் பெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உலர் பழங்கள்
உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும் உலர் பழங்கள், பல்வேறு உடல்நலப் பிரச்சனையை சரி செய்கின்றது.
உட்ல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் போதுமான ஊட்டச்சத்து அவசியம் ஆகும். ஆகவே தான் காலையில் உலர் பழங்களை நாம் எடுத்துக் கொண்டால் மிகவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலர் பழங்களில் கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதுடன், காலை நேர சிற்றுண்டிக்கு மிகச்சிறந்தது ஆகும். தற்போது இதன் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
உலர் பழங்களின் நன்மை என்ன?
தினமும் 10 பாதாம் சாப்பிடுவதால் உடம்பிற்கு தேவையான வைட்டமின் ஈ சத்தானது 50 சதவீதம் கிடைக்கின்றது.
நார்ச்சத்து அதிகம் கொண்ட பிஸ்தா பருப்பை நாம் எடுத்துக் கொண்டால் இரைப்பை மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது ஆகும்.
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வால்நட்ஸில், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, பாலிபினால்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றில் நிறைந்துள்ளது. புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற உயிர்கொல்லி நோய்களை குறைக்கவும் செய்கின்றது.
முந்திரியில் பூஜ்ஜியம் கொழுப்பு உள்ளதால், இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கின்றது. இதய பாதிப்பு வராமலும் தடுக்கின்றது.
நெய்யில் வறுத்த உலர் பேரீச்சம் பழத்தினை தினமும் 2 அல்லது 3 சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகுமாம்.
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் வழங்குவதால், இவற்றை உட்கொள்வதால் இரத்த அளவு அதிகரிப்பதுடன், ரத்த சோகையிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |