வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டிய மீன்... நோய்கள் 10 அடி தள்ளியே நிற்குமாம்! என்ன மீன் தெரியுமா?
நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம். அசைவ உணவு என்று வரும் போது நாம் சாப்பிடும் கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
மீன் என்பது சிறியவர்கள் வரை பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு மிகச்சுவையான உணவாகும். அதிலும் பிரஷ் ஆன மீனில் உள்ள சுவை என்பது வேறு எதிலும் கிடைக்காது. மீன் என்று வரும் பொழுது உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரும்… எந்த மீனில் அதிக சத்துக்கள் உள்ளது… எந்த மீன் உடலுக்கு மிகவும் நல்லது என்ற சந்தேகம் தான் அது…! இதய ஆரோக்கியம் நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது.
இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும். செல்லுலார் பழுது செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், இந்த திசுக்களில் உள்ள கோளாறுகளை சரி செய்யவும் தேவையான அளவு புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.
சரும ஆரோக்கியம் நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும். பற்கள் மற்றும் எலும்புகள் நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது.
இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. கண் ஆரோக்கியம் நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சினைகளைத் தடுக்கலாம்.
உடல் எடை குறைய நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும். அறிவாற்றல் மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.
புற்றுநோய் வாய்ப்பு குறைவு மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது. மன அழுத்தம், மூளை வளர்ச்சிக்கு மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.
மேலும் மூளைவளர்ச்சிகும், நல்ல பார்வை திறனுக்கும் உதவுகின்றது. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது. தரமான மீனை தேர்ந்தெடுப்பது எப்படி? கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும்.
செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும்.
மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது.
மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும்.
தசைப்பகுதி உறுதியாக இருக்கும்.
கடல் பாசி மனம் இருக்கும்.