வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்க: அதிசயத்தை கண்கூடாக பார்ப்பீங்க
காலை வெறும்வயிற்றில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பழங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை உணவு தான் அன்றைய நாள் முழுவதுக்குமான உங்களது மனநிலை மற்றும் ஆற்றலை தீர்மானிக்கின்றது.
அந்த வகையில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான பழங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பப்பாளி
வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த பழங்களில் பப்பாளி முதன்மையானது. இதில் உள்ள பப்பேன் என்ற நொதி செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பப்பாளியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை விரைவில் செரிமானம் செய்யவும், எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.
தர்பூசணி
அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி பழத்தினை நாம் காலையில் எடுத்துக் கொண்டால், ரத்த அழுத்தத்தை சீராக்கி, இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கும் உதவுகின்றது.
இதிலுள்ள பொட்டாசியம், தாமிரம், வைட்டமின் சி, ஏ மற்றும் பி5 போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், கொலாஜன் உற்பத்தியினை மேம்படுத்தி சருமத்தை மென்மையாகவும், ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்கின்றது.
ஆரஞ்சு
வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் செய்யும்.
இதில் வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற சத்துக்கள் அதிகம். இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கும், நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கும் இது உதவும்.
ஆனால், ஆரஞ்சு அமிலத்தன்மை கொண்டது என்பதால், வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிலருக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தலாம்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிற பெர்ரி வகைப் பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்றவை. ஸ்ட்ராபெர்ரியில் நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமலும், நீரிழிவு நோய் வரும் அபாயத்தை குறைக்கவும் உதவும்.
ஸ்ட்ராபெர்ரி அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.
இது செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது. ஆனால் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
எனவே, வெறும் வயிற்றில் வாழை சாப்பிடும்போது, நட்ஸ், ஓட்ஸ், தயிர் அல்லது தானியங்களுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |