ஆண்களே மிளகுத்தூள் கொஞ்சம் தூக்கலாக போட்டு சாப்பிடுவதுதான் பிடிக்குமா? எச்சரிக்கை... இனி இந்த பிழையை செய்ய வேண்டாம்
சிலருக்கு காரமான உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக பெப்பர் சிக்கன், மட்டன் சுக்கா போன்ற அசைவ சமையலில் மிளகுத் தூள் இல்லையெனில் சுவையே இல்லை. பலரும் விரும்பும் ஃபிரைடு ரைசில் கூட பெப்பர் தூக்கலாகக் கலந்து சாப்பிடும் நபர்களும் உண்டு. அப்படி தினமும் மிளகுத் தூளை அதிகமாக சேர்த்துக்கொள்கிறீர்கள் எனில் சில உபாதைகளை சந்திக்க நேரிடும்.
அவை என்னென்ன பார்க்கலாம். அதிகமாக மிளகுத்தூள் சேர்க்கும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பாதிக்கப்படும். அதன் ஆரோக்கியம் குறையும் என கூறப்படுகிறது. அதிக மிளகுப் பொடி சேர்ப்பது வயிற்றில் எரிச்சலை உண்டாக்கலாம். இதனால் ஜீரணக் குறைபாடு உண்டாகலாம். எனவே வயிற்று வலியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிகள் அதிகம் மிளகு சேர்த்துக்கொள்வது நல்லதல்ல. இது நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். அதிக மிளகு சாப்பிடுவது 80 சதவீதம் கரு அழிவிற்கு வித்தாகும் என ஆய்வில் கூறப்படுகிறது.
எனவே கருத்தரிக்க நினைப்போர், கர்ப்பமாக இருப்போர் மிளகு முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்கின்றனர். அதேபோல் கருப்பையை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. சருமம் எரிச்சல், தோல் சிவத்தல் போன்ற விஷயங்களை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. மிளகை கொஞ்சம் நுகர்ந்தாலே தும்மல் உண்டாகும். அப்படி தொடர் தும்மல் வந்தால் தலைவலியும் இலவசமாகக் கிடைக்கும்.
குறிப்பாக வயதானவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்ப்பது நல்லது.
எனவே மேலே குறிப்பிட்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு அடுத்த முறை மிளகுத்தூளையும் அளவாக பயன்படுத்துங்கள். அளவாக சாப்பிட்டால் அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்பதை மறந்துவிடாதீர்கள்.