குளிர்காலத்தில் கட்டாயம் வேர்க்கடலை சாப்பிடுங்க... ஏன்னு தெரியுமா?
குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வேர்க்கடலை
ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றது. அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிடக்கூடிய பொருளாகவும் வேர்க்கடலை இருக்கின்றது.
நம்முடைய உணவு முறை நமது ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருப்பது அவசியம். வேர்க்கடலையில் சிற்றுண்டி செய்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அதிலும் குளிர்காலங்களில் அடிக்கடி வேர்க்கடலை உண்பதால் குளிரை எதிர்த்து போராடும் ஆற்றல் கிடைக்கின்றது. ஏனெனில் குளிரைத் தாங்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது.
குளிர்காலத்தில் வேர்க்கடலை உண்பதால் கிடைக்கும் சில நன்மைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் வேர்க்கடலை
குளிர்காலத்தில் உடல் ஆற்றலை வேர்க்கடலை அதிகப்படுத்துகின்றது. ஆம் குளிர்காலங்களில் சோர்வாகவும், மந்தமாகவும் இருக்கும். ஆனால் வேர்க்கடலை சாப்பிடுவதால் ஆற்றல் கிடைப்பதுடன், இதில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் ஆகியவை குளிரை தாங்கக்கூடியதாக இருக்கின்றது. குளிர்காலத்தில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக செயல்பட ஒரு கைப்பிடி வேர்க்கடலையை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும்.
வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக உள்ள நிலையில், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. வேர்க்கடலையில் காண்ப்படும் ரெஸ்வெராட்ரோல் மாதிரியான ஆக்ஸிஜனேற்றங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஆதலால் குளிர் காலங்களில் கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் குளிர்காலங்கள் ஆரம்பித்துவிட்டாலே கூடவே சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்பட்டு விடும். வேர்க்கடலையில் உள்ள துத்தநாகம், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதுடன், நோய்தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கின்றது.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிக்கவும், மலச்சிக்கல் வராமலும் தடுக்கின்றது. குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக பருகுவதால், மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கின்றது. மேலும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவிற்கு இது உதவியாக இருக்கும்.
வேர்க்கடலையில் உள்ள வைட்டமின்கள் பி, நியாசின், ஃபோலேட் போன்றவை உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. மேலும் இதிலுள்ள மெக்னீசியம் தசை, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தி சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றது.
வேர்க்கடலை உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கின்றது. ஏனெனில் குறைவாக சாப்பிட்டாலும், வயிறு நிறைந்த உணர்வை அளிப்பதால், அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க முடியும்.
வேர்க்கடலை ஆரோக்கியம் நிறைந்ததாக இருந்தாலும், இதில் இருக்கும் அதிக கலோரிகள் உடல் எடையை அதிகரிக்கவும் செய்யும். அவித்த அல்லது வறுத்த கடலையை 50 அல்லும் 100 கிராமிற்குள் எடுத்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |