தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட்டு பாருங்க... ஏராளமான நன்மையை பெறலாம்
தினமும் கிவி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கிவி
ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்று தான் கிவி பழம் ஆகும். இனிப்பு மற்றும் புளிப்பு சுவையில் இருக்கும் இப்பழத்தில் நமது உடம்பிற்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கின்றது.
மேலும் வைட்டமின் C, வைட்டமின் E, கால்சியம், மெக்னீசியம், மற்றும் புரதம் ஆகியவற்றையும் கொடுக்கின்றது.
செரிமானத்தைக் குறுக்கக்கூடிய மலச்சிக்கல், வயிற்று உளைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். குறிப்பாக, தோலுடன் சேர்த்து சாப்பிடும் போது, இதில் உள்ள நார்ச்சத்து குடலுக்கு கூடுதல் ஆதரவாக செயல்படுகிறது.
தினமும் ஒரு கிவி பழம் சாப்பிடுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல்நலம் பராமரிக்கப்படலாம்.
இதில் உள்ள லூட்டீன் என்ற ஊட்டச்சத்து, கண்களின் ஆரோக்கியத்தைக் காக்க உதவுகிறது. கண்புரை போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் தன்மையும் இதில் காணப்படுகிறது.
எனினும், சிலருக்கு இந்தப் பழம் ஒவ்வாமை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மகரந்தத்திற்கு ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை இல்லாமல் கிவி பழத்தை சாப்பிட வேண்டாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |