வயிறு உப்புச பிரச்சனையா? இதை ஒரு கப் சாப்பிடுங்க
நாம் சாப்பிடும் உணவை உடலுக்கு சத்தை பிரித்து கொடுப்பதில் இருந்து நமக்கு சக்தியை வழங்குவதில் காரணியாக செயற்படுவது இந்த குடல் தான்.
எனவே குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது நமது கடமையாகும். இதற்காக சரியான உணவை மட்டும் எடுத்துக்கொண்டால் போதாது. புரோபயாடிக் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
இந்த உணவுகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அந்த உணவுகள் பற்றி பார்க்கலாம்.
உப்புஷத்தை குறைக்கும் உணவுகள்
யோகர்ட் - எல்லா கடைகளிலும் குறைந்த விலைகளில் மிகவும் எளிதாக யோகர்ட் கிடைக்கும். இதில் அதிக புரோபயாடிக் உள்ளது. இவை செரிமானத்தை சீராக்கும் ஒரு நிவாரணியாகும்.
காரணம் இதில் இருக்கும் லாக்டோபாகிலஸ் போன்ற நன்மை பயக்கும் பாக்ட்ரீயாக்கள் தான்.
எனவே வயிறு உப்புச பிரச்சனைகள் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கப் யோகர்ட் சாப்பிடுவதால் கால்சியம், புரதம் மற்றும் செரிமானத்தை ஆதரிக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு கூடுதலாக புரோபயாடிக்குகளும் கிடைக்கும்.
மோர் - தயிரில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பானம் தான் மோர். இதில் லாக்டோபாகிலஸ் மற்றும் வேறு நன்மைகள் கிடைக்கும் பக்பாக்ட்ரீயாக்கள் நிறைந்துள்ளன.
இவை நம் குடல் ஆரோக்கியத்தை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்தும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது சாப்பிட்ட பின் ஒரு கிளாஸ் மோர் குடிப்பது தான். இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவும் மற்றும் வயிற்று உப்புசத்தைத் தடுக்கும்.
கஞ்சி - நாம் தினமும் குடிக்கும் கஞ்சி அல்ல. இந்த கஞ்சி புளித்த அரிசி அல்லது தினையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கஞ்சியாகும். இதை வட இந்திய குளிர்கால பானம் என அழைப்பார்கள்.
இதில் கடுகு விதைகளுடன் மசாலா சேர்க்கப்படுகிறது. இதன் நொதித்தல் செயல்முறை செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் நன்மை பயக்கும் புரோபயாடிக்குகளை உருவாக்குகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |