இரவு நேரத்தில் பருப்பு உணவுகளை சாப்பிடலாமா?
இன்றைய காலகட்டத்தில் டயட்டில் இருப்பவர்கள் பலரும் இரவு நேர உணவை தவிர்த்து வருகிறார்கள், சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு இரவு நேரத்தில் எந்த வகையான உணவை சாப்பிட வேண்டும் என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
குறிப்பாக இரவு நேரத்தில் பருப்பு வகை உணவை சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் பருப்புகளில் கலோரிகள் அதிகம், தினமும் சாம்பார் வடிவிலாவது பருப்புகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். இரவில் பருப்பு சாப்பிடலாம், ஆனால் சிறிய அளவில் சாப்பிட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள் நிபுணர்கள்.
அதிலும் முக்கியமாக பாசிப்பருப்பு எளிதில் ஜீரணம் ஆகும் என்பதால் அதை சாப்பிடலாம், எந்த உணவாக இருந்தாலும் இரவு தூங்குவதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்பாக சாப்பிடுவது அவசியம்.