இரத்த சக்கரை அளவை முற்றாக ஒளிக்க வேண்டுமா? காலையில் இந்த விதை நீரை குடிங்க
பொதுவாக இரத்த சக்கரை என்பது இப்போது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு இருப்பது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
இதற்கு நீங்கள் உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் இரத்த சர்க்கரை அளவு மாறுபடும்.
முழு தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். தினசரி உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமாகும்.
இது தவிர நாம் இதை கட்டுக்குள் வைத்திருக்க வீட்டில் சில வைத்தியங்களையும் செய்யலாம். சக்கரை அளவை கட்டுக்குள் வைக்க காலையில் வெந்தய நீர் கடிக்கலாம். இதை பற்றிய விரிவான தகவலை இங்க பார்க்கலாம்.
இரத்த சக்கரை அளவு
வெந்தயம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்கும். இயற்கையிலேயே ரத்தத்தின் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் பண்புகள் வெந்தயத்திற்கு உள்ளது.
நீரிழிவின் காரணமாக உண்டாகும் நரம்புக் கோளாறுகள், ரத்த அழுத்தம், யர் கொலஸ்டிரால், தொற்றுக்கள், வயதான தோற்றம், நரம்புக் கோளாறுகள் கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என எல்லாவற்றுக்கும் தீர்வாக நாம் வெந்தயத்தை எடுத்துக்கொள்ளலாம்.
வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்துக்கள் ரத்தத்தில் உள்ள டிரை கிளிசரைடுகளைக் குறைத்து உடல் பருமனை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும்.
எடுத்துக்கொள்ளும் முறை
வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து அடுத்த நாள் காலையில் அந்த தண்ணீரையும் வெந்தயத்தையும் அப்படியே சாப்பிட வேண்டும்.
இத தவிர வெந்தயத்தை ஊற வைத்த நீரை கொதிக்க வைத்து டீ போல குடிக்கலாம். கொஞ்சமாக வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
இதன்போது எடுத்துக்கொள்ளும் வெந்தயம்முளைகட்டி வைத்து பயன்படுத்தும் போது அதன் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும். 0 கிராம் அளவுக்கு வெந்தயத்தை எடுத்து 2 மணி நேரம் ஊற வைத்து பயன்படுத்துவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |