தொப்பையை சட்டென கரைக்க தொடர்ந்து கடைப்பிடிக்க ஈஸியான 5 வழிகள்
பொதுவாகவே இப்போதுள்ளவர்களுக்கு உடல் எடையைக் குறைப்பது பெரும் போராட்டமாகவே இருக்கும். இவ்வாறு அதிகரித்துக் கொண்டு போகும் தொப்பையால் பலரும் பல கேலி கிண்டல்களையும் சந்தித்து வருவார்கள்.
ஒரு சிலர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடை குறைந்த பாடாக இருக்காது. உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள்.
சிலருக்கு உடல் எடையை குறைக்க நேரம் இல்லாமல் இருக்கும். அப்படியானர்களுக்கு தொப்பையைக் குறைக்க ஈஸியான வழிகள் சில உள்ளன அவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் இலகுவில் குறைக்கலாம்.
தொப்பையைக் குறைக்க
தொப்பையை மட்டுமல்ல ஆரோக்கியமான உடலுக்கு வாழ்க்கை முறைக்கும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக முக்கியமானது. அதிக தண்ணீர் குடிப்பது கொழுப்பை நன்கு கரைக்கும் என்று சொல்லப்படுகிறது.
தொங்கிக் கொண்டிக்கும் தொப்பையை விரட்டி தட்டையான தொப்பையை பெற அதிக உணவை சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் தூங்கும் அளவும் உங்கள் தொப்பைக்கு காரணம். ஏனெனில் தூக்கம் இல்லாமல் இருக்கும் போது உடல் எடை அதிகரிக்கும் இதனால் தினமும் எட்டு மணிநேரம் நல்ல தூக்கம் மிக அவசியமானது.
உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி இன்றியமையாததது. கலோரிகளை எரிக்கவும், தசைகளை உருவாக்கவும் உடலுக்கு உடற்பயிற்சி மிக முக்கியம். அதனால் வார்த்தில் நான்கு நாட்களுக்கு சரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி மன நிலையை நல்ல நிலையில் வைத்திருக்க காலை வேளையில் உட்கொள்ளும் உணவு முக்கியமானதாகும். ஏனெனில் மன அழுத்தம் தொப்பையை விழுங்க மிக முக்கிய காரணமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |