ஈஸியா கற்றுக்கொள்ள சிறந்த வழி! இதுதான் அல்டிமேட்- கட்டாயம் படித்து விடுங்கள்
எல்லோருக்குமே சிறுவயதில் எல்லா விடயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும், இதனால் தான் நாம் சிறு வயதில் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத விடயமாக இருந்தாலும் அதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நமது பெற்றோரிடம் ஏன்? எதற்கு ? என்ற கேள்விகளை அதிகம் கேட்டுக் கொண்டே இருந்திருப்போம்.
ஆனால் நாம் வளர்ந்த பின்னர் நாம் ஏதாவது ஒரு துறையை தெரிவு செய்துவிட்டு இதன் பின் ஓட தொடங்கிவிடுவோம். ஆனால் அந்த ஒரு துறை தொடர்பிலும் கூட நம்மால் பூரண அறிவை வளர்த்துக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.
இவ்வாறு இல்லாமல் எந்த விடயமாக இருந்தாலும் உடனடியாக கற்றுக்கொள்வது எப்படி என்ற விடயத்தை அடிப்படையாக கொண்டு தி ஆர்ட் ஆஃப் லேர்னிங் (The Art of Learning) எனும் நூலில் ஜோஸ் என்பவர் விளக்கம் அளித்துள்ளார்.
அடிப்படை நுணுக்கங்கள்
இவர் 12 வயதில் இருக்கும் போதே சதுரங்க ஆட்டத்தில் தேர்ச்சி பெற்ற வல்லுனராகியுள்ளார். அதன் பின்னர் சதுரங்கத்துடன் சம்பந்தமே இல்லாத துறையான தற்காப்பு கலையை கற்று அதில் பல தங்கப் பதக்கங்களையும் வாங்கி குவித்துள்ளார்.
இவரின் வாழ்வில் எப்படி இருவேறுப்பட்ட துறைகளில் வல்லுணராக திகழமுடிந்து என்பதை பற்றிய ரகசியத்தையே இவர் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாகவே நாம் ஒரு துறையில் தேர்ச்சிபெற வேண்டுமாக இருந்தால் அந்த துறையில் தற்போது யார் முன்னிலையில் இருக்கின்றார்கள், இவர்கள் தற்போது எண்ண செய்கின்றார்கள் என்பது குறித்து மாத்திரமே சிந்திக்கும் ஒரு மேலோட்டமான சிந்தனையுடையவர்களாக இருக்கின்றோம்.
இது முற்றிலும் தவறு நாம் எந்த விடயத்தை முழுமையாக கற்றுக்கொள்ள நினைக்கின்றோமோ அந்த விடயம் குறித்து அடிப்படை நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய கலையாக இருந்தாலும் சிறிய நுணுக்கமான விடயங்கள் தான் அடிப்படையாக இருக்கும்.
வெற்றியின் இரகசியம்
அந்த அடிப்படையை கற்றுக்கொண்டால் யாரும் குறித்த விடயத்தில் இலகுவாக ஒரு உயரிய நிலையை அடையலாம். இது எதனுடன் சம்பந்தப்ட்டதாக இருந்தாலும் இலகுவில் கற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்ச்சி பெற வேண்டுமாக இருந்தால் குறித்த விடயத்தில் பல முறை தோல்லியடையவும் தயாராக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியே குறித்த விடயம் பற்றிய அறிவை நம்மிடம் மேலும் வளர்க்க உதவும். எத்தனை முறை தோற்கின்றோமோ அவ்வளவு தேர்ச்சியடைய முடியும் இதற்கு தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் அவசியம். இதுவே அவரின் வெற்றியின் இரகசியம் என அந்த புத்தகம் சான்று பகர்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |