வீட்டில் இட்டி மீந்து விட்டதா? அப்போ அதை வைத்து இப்படி இட்லி மஞ்சூரியன் செய்ங்க
வீட்டில் உளிதாக செய்யும் காலை உணவ உன்றால் அது இட்லி தான். ஆனால் இட்லியை யாரும் விரும்பி சாப்பிடுவது குறைவு. இதனாலேயே வீட்டில் எப்படியாவது இட்லி மிச்சமாகும்.
அப்படி மிச்சமாகும் இட்லியை இனிமெல் தூக்கி போடாமல் அதை அப்படியே இட்லி மஞ்சூரியன் செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆஹா ஓஹோ என சாப்பிடுவார்கள்.
இந்த மிச்சமாகிய இட்லியை வைத்து எப்படி இட்லி மஞ்சூரியன் செய்யலாம் என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- இட்லி-5
- கோதுமை மாவு-2 தேக்கரண்டி
- அரிசி மாவு- 2 தேக்கரண்டி
- சோளமாவு-2 தேக்கரண்டி
- மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
- மிளகு தூள்-1/2 தேக்கரண்டி
- உப்பு- தேவையான அளவு
- சோயா சாஸ்-1/2 தேக்கரண்டி
- எண்ணெய்- தேவையான அளவு
- நறுக்கிய பூண்டு-1/2 தேக்கரண்டி
- நறுக்கிய இஞ்சி-1 துண்டு
- நறுக்கிய பச்சை மிளகாய்-1 சிறிதாக நறுக்கிய வெங்காயம்-1
- சிறிதாக நறுக்கிய கேப்ஸிகம்-1
- டொமேட்டோ சாஸ்-1 தேக்கரண்டி
- சில்லி சாஸ்-1 தேக்கரண்டி
- சோயா சாஸ்-1 தேக்கரண்டி
- தண்ணீரில் கரைத்த சோள மாவு 1 தேக்கரண்டி
- ஸ்பிரிங் ஆனியன்- தேவையான அளவு
செய்முறை
முதலில் இட்லியை எடுத்து அதை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் ஒரு ஒரு சிறிய பாத்திரத்தில் கோதுமை மாவு அரிசி மாவு , சோள மாவு சேர்த்து அத்துடன் மிளகாய் தூள் , உப்பு , மிளகு தூள் , சோயா சாஸ் தண்ணீர் சிறிது ஊற்றி நன்றாக பஜ்ஜி பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
இப்போது சின்னதாக வெட்டி வைத்திருக்கும் இட்லியை அதில் சேர்த்து பிரட்டி பஜ்ஜி போடுவது போல எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிதாக நறுக்கிய பூண்டு, சிறிதாக வெட்டிய இஞ்சி , சிறிதாக வெட்டிய மிளகாய் , வெங்காயம் சின்னதாக வெட்டியதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது அத்துடன் சிறிதாக நறுக்கிய கேப்ஸிகம் , டோமேட்டோ சாஸ் , சில்லி சாஸ் , சோயா சாஸ் , தண்ணீரில் சோள மாவைக் கரைத்து ஊற்றவும்.
பின்னர் இத்துடன் பொரித்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து நன்றாக கிளறி அதன் மேலே வெட்டி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை தூவி இறக்கவும். இப்போது சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |