மழைக்காலத்தில் வரும் கொசுக்களுக்கு இது தான் தீர்வு- நீங்களும் செய்து பாருங்க
மழைக்காலத்தில் கொசு தொல்லைகள் அதிகமாக இருப்பதனால் டெங்கு, மலேரியா போன்ற கடும் காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளது.
இதனை தடுப்பதற்கு சிலர் பிரியாணி இலை, வேப்பெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி கொசுவை தடுக்க முயற்சிப்பார்கள். இருந்தாலும் கொசுக்கள் கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் தான் அதிகமாக வாழ்கின்றன.
அதிலும் குறிப்பாக மற்ற காலங்களை விட மழைக்காலம் வந்து விட்டால் கொசுக்களுக்கு பஞ்சமே இருக்காது. சந்தையில், கொசுவை தடுப்பதற்கு செயற்கையான பல திரவங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், இவை சுவாச பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மூலிகை பொருட்களை கொண்டு கொசுக்களை கட்டுபடுத்த முயற்சிப்பதே சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அந்த வகையில், இயற்கையான முறையில் கொசுக்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கொசுக்களை விரட்டியடிக்கும் புகை
1. முதலில் ஒரு மணல் தட்டு அமைத்து கொள்ளவும். அதில் இரண்டு கற்பூரத்தை கைகளால் நொறுக்கிப் போடுங்கள்.
2. அதில், சாம்பிராணியை நொறுக்கி போட்டுக் கொள்ளலாம். இவற்றுடன் இரண்டு பிரியாணி இலைகளை சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனுடன் ஒரு ஸ்பூன் வேப்பெண்ணெய் ஊற்ற வேண்டும்.
4. பின்னர், மற்றொரு பிரியாணி இலை எடுத்து அதன் மீது வேப்பெண்ணெய் தடவ வேண்டும்.
5. இந்த பிரியாணி இலையை தட்டின் நடுவில் வைத்து நெருப்பு பற்ற வைக்க வேண்டும்.
6. இந்த புகையிலிருந்து வெளியாகும் மணம் கொசுக்களை விரட்டியடிக்கும். அத்துடன் இதனை சுவாசிப்பதால் எந்தவித சுவாசபிரச்சினையும் வராது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |