நாவூரும் சுவையில் முட்டை சாலட்.... செஞ்சதுமே காலியாகிடும்
பொதுவாகவே ஆரோக்கியம் நிறைந்த விலை மலிவான உணவு பொட்களின் பட்டியலில் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றது.
புரதத்தின் மிகச்சிறந்த மூலமாக திகழும் முட்டை என்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்குமே பிடிக்கும்.

எப்போதும் முட்டை பெரியல், ஆம்லெட், குழம்பு தான் செய்திருப்போம் சற்று வித்தியாசமான முறையில், எளிமையாக செய்யக்கூடிய முட்டை சாலட் ரெசிபியை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 4 (வேகவைத்தது)
தயிர் - ஒரு கப்
பூண்டு - 4 (துருவியது)
உப்பு - தேவையான அளவு
வெங்காயம்- 1 (நறுக்கியது)
வெள்ளரிக்காய்- 1 (நறுக்கியது)
மிளகு தூள்- 1/2 தே. கரண்டி
கொத்ததல்லி - சிறிதளவு (நறுக்கியது)
பிரஷ் கிறீம்- சிறிதளவு

தாளிக்க தேவையானவை
எண்ணெய்- 2 தே.கரண்டி
மிளகாய் தூள்- 1 தே. கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தே.கரண்டி
கஸ்தூரி மேத்தி அல்லது கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில், ஒலு கப் தயிர், துருவிய பூண்டு, உப்பு, வெங்காயம், வெள்ளரிக்காய், மிளகு தூள், பிரஷ் கிறீம் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வேகவைத்த முட்டைகைளை இரண்டு துண்டுகளாக வெட்டி அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தாளிப்புக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கலவையில் நேர்த்து கலந்துவிட்டால் அவ்வளவு தான் அட்டகாசமாக சுவையில் முட்டை சாலட் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |