10 நிமிடத்தில் சுவையான காலை உணவு ரெடி! செய்வது எப்படி?
காலை உணவை பலரும் தவிர்த்து வரும் வேலையில், வீட்டு இல்லத்தரசிகளுக்கு சுவையான காலை உணவை எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - கால் கிலோ,
தேங்காய் - ஒரு மூடி,
கொத்தமல்லி - ஒரு கட்டு,
பச்சை மிளகாய் - 4,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 50 கிராம்,
உப்பு - தேவைக்கு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, சீரகம், உப்பு, துருவிய தேங்காய், கொத்தமல்லி, ப.மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்திக்கு மாவு பிசைவதை கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் மாவை வைத்து அடை போல தட்டி இரு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.